பணியிடத்தில் ஊழியர்கள் சிரித்து மகிழ்ச்சியாக இருந்தால் நிறுவனத்துக்கு கிடைக்கும் நன்மைகள்…!
நம்மில் பெரும்பாலானோர் ஒரு நிறுவனம் அல்லது அலுவலகத்தில் பணியாற்றுபவர்களாக இருப்போம். நாளொன்றுக்கு 8 – 9 மணிநேரங்கள் வேலை செய்கிறோம். இந்த சூழலில் வேலை நாட்களில் நம்முடைய குடும்ப உறுப்பினர்களுடன் அல்லது நண்பர்களுடன் நேரம் செலவழிப்பதை விட, வேலை செய்யும் இடத்தில் இருக்கும் நபர்களுடன் தான் அதிக நேரம் இருக்கிறோம்.
ஒரு சிலருக்கு பணிசூழல் என்பது சிரிப்பும், உற்சாகமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருந்தாலும், பலருக்கு இப்படிப்பட்ட சூழல் வாய்ப்பதில்லை. ஆனால் ஒரு சிறந்த பணியிடத்திற்கு சிரிப்பு என்பது மிகவும் அவசியமானது. பணியிடத்தில் ஊழியர்கள் சிரித்த முகத்துடன் இருப்பது ஏன் முக்கியம் என்பதற்கான சில காரணங்களை இங்கே… Visionet Systems India-வின் MD மற்றும் BFSI Business-ன் குளோபல் ஹெட் அலோக் பன்சால் இதுபற்றி எழுதியிருப்பதை பார்க்கலாம்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான மெல் ப்ரூக்ஸ் ஒருமுறை கூறுகையில் “சிரிப்பு” என்பது மன அழுத்தம், வலி மற்றும் தீவிர மோதல்கள் ஏற்படுத்தும் பாதிப்பு உள்ளிட்டவற்றில் இருந்து வெளிவர உதவும் ஒரு சக்திவாய்ந்த மருந்தாகும். பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் மனம் மற்றும் உடலை எளிதில் சமநிலைக்கு கொண்டுவர ஒரு நல்ல சிரிப்பை காட்டிலும் வேகமாக எதுவும் செயல்படாது.
தடைகளை உடைக்க, (அழுத்தத்தை) ஸ்ட்ரஸ்ஸை குறைக்க, நல்ல நேர்மறை மற்றும் படைப்பாற்றல் சூழலை வளர்க்க சிரிப்பு உதவுகிறது. இவ்வளவு நன்மைகளை கொண்ட சிரிப்பை பணியிடத்தில் நேர்மறை பணிச்சூழலை உருவாக்குவதற்கான வழிமுறையாக யாரும் கருதுவதில்லை. ஆனால் சிரிப்பானது பணியாளர்களின் மன உறுதி மற்றும் உற்பத்தித்திறனில் குறிப்பிடத்தக்க நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வு கூறுகிறது.
சிரிப்பதால் கிடைக்கும் மிக முக்கிய நன்மைகளில் ஒன்று மன அழுத்தம் வெகுவாக குறைகிறது. பொதுவாக பலருக்கும் வேலை என்பது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து கொண்டே வேலைகளை தொடரும் பணியாளர்கள் Burnout-ஐ அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம். இது அவர்களின் உற்பத்தித்திறன் குறைவதற்கு வழிவகுக்கும். அதே நேரம் மறுபுறம் சிரிப்பு என்பது உடலில் Endorphins ஹார்மோன்களின் வெளியீட்டை தூண்டுகிறது. இந்த ஹார்மோன்கள் மனநிலையை இயற்கையாக மேம்படுத்தி, மனஅழுத்தத்தை குறைக்க உதவுவதோடு மகிழ்ச்சியாக மற்றும் ஆறுதலாக இருப்பதை ஊக்குவிக்கின்றன.
தவிர பணியிடத்தில் சக ஊழியர்களிடையே வலுவான உறவை உருவாக்கவும் சிரிப்பு உதவுகிறது. ஊழியர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து பேசி மகிழ்ந்து சிரிக்கும் போது அவர்களுக்குள் பிணைப்பு வலுவாகி நட்புணர்வு மேலோங்குகிறது. இது அவர்களுக்குள் சிறந்த தகவல் தொடர்பு, ஒத்துழைப்பு மற்றும் நல்ல குழுவேலை உள்ளிட்ட விஷயங்களுக்கு உதவியாக இருக்கிறது. பணியிடத்தில் ஊழியர்களிடையே வலுவான உறவுகள் இருப்பது மிகவும் முக்கியம். இது தான் உற்பத்தித்திறன் அதிகரிக்க, சிக்கல்கல் ஏற்பட்டால் கூட சிறப்பான முறையில் தீர்க்க உதவி நேர்மறையான பணிச்சூழலை ஊழியர்களுக்கும், நிர்வாகத்திற்கும் ஏற்படுத்தி தருகிறது.
மேலும் சிரிப்பானது நல்ல படைப்பாற்றல் மற்றும் புதுமையுடன் தொடர்புடையது. பணியாளர்கள் தங்களுக்குள் பேசி சிரித்து மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களின் மனநிலை நேர்மறை மற்றும் நிதானமாகவும் இருக்கும். இதன் மூலம் அவர்களின் படைப்பாற்றல் மற்றும் சிந்தனை திறன் அதிகரித்து பிரச்சனைகளுக்கு புதுமையான தீர்வுகளை கொடுக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மொத்தத்தில் சிரிப்பானது ஊழியர்களின் அறிவாற்றல் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த வேலை செயல்திறனை மேம்படுத்துகிறது.
சிரிப்பின் மேற்கண்ட நன்மைகளை கருத்தில் கொண்டு நிறுவனங்கள்இ வேடிக்கை மற்றும் நகைச்சுவையை ஊக்குவிக்கும் நேர்மறையான பணிச்சூழலை உருவாக்கி பணியிடத்தில் ஊழியர்கள் சிரிப்பதை ஊக்குவிக்கலாம். சோஷியல் ஈவன்ட் நடத்துவதுஇ சாதனைகளை ஒன்று கூடி கொண்டாடுவது மற்றும் ஜோக்ஸ் அல்லது வேடிக்கையான கதைகளை அனைவரிடமும் ஷேர் செய்ய ஊழியர்களை ஊக்குவிப்பது உள்ளிட்டவற்றில் நிறுவனங்கள் கவனம் செலுத்தலாம். நிறுவன தலைவர்கள் ஊழியர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பது முக்கியம். அவர்களாலும் நன்றாக சிரிக்கஇ கவலை இல்லாமல் இருக்க முடியும் என்பதை காட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்