𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினரால் யாத்திரிகர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட தாகசாந்தி நிகழ்வுகள்!
அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பு 𝗦𝗣𝗔𝗡𝗗 (ஸ்பாண்ட்) அமைப்பினரால் புனித கதிர்காம பாத யாத்திரையினை மேற்கொள்ளும் பக்த அடியார்களின் தாகத்தினை தீர்க்கும் நோக்கில் சந்நியாசி மலைக்கு முன்பாக யாத்திரை சென்று கொண்டிருந்த யாத்திரிகர்களுக்கு தாகசந்திக்கான தளம் அமைத்து பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்களின் தாகம் தீர்க்க வத்தகப் பழங்களை வழங்கப்பட்டது
மேலும் 𝗦𝗣𝗔𝗡𝗗 (ஸ்பாண்ட்) அமைப்பினர் லாகுகளை பிரதேச செயலாளரை சந்திந்து கலந்துரையாடி வனாந்தரத்தில் பிளாஸ்ட்டிக் மற்றும் பொலித்தின் குப்பைகளை போட வேண்டாம் என்ற பதாதைகள் அவரிடத்தில் கையளித்தனர்.
அத்துடன் ஆலய வளாகத்தில் 𝗦𝗣𝗔𝗡𝗗 (ஸ்பாண்ட்) அமைப்பினரினால் சிரமதான பணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் 𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினரினால் தொடர்ச்சியாக தாகசாந்தி தளம் அமைக்கப்பட்டு பாத யாத்திரையினை மேற்கொள்ளும் பாதயாத்திரிகர்களுக்கு தாகம் தீர்க்கும் தாக சாந்தி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்