குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை

தம்புத்தேகம பிரதேசத்தில் குழந்தையொன்றை குப்பைத்தொட்டியில் வீசியெறிந்து கொலை செய்ய முயற்சித்த பெண் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 16 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் வீட்டில் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். கடந்த 20 ஆம் திகதி குழந்தை குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட நிலையில், பொது மக்களின் தகவலுக்கமைய பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

தம்புத்தேகம வைத்தியசாலையில் மீட்கப்பட்டுள்ள குழந்தை மற்றும் தாய் ஆகியோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.