மகாவிஷ்ணு அவதாரம் : போலிச்சாமிக்கு நடந்த கதி!

 

இந்தியா-தமிழக மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்துவதற்காக மஹா விஷ்ணு அவதாரம் எடுத்துள்ளதாக கூறி வந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் தான் மகாவிஷ்ணுவின் அவதாரம் என கூறி மோசடி செய்த போலி சாமியார் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

அதன்படி செஞ்சியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற நபர் தான் பூமியில் மனித உருவத்தில் அவதரித்தவர் என்று சொன்னதோடு தனது இரண்டு மனைவியரை ஸ்ரீதேவி, பூதேவி என்று கூறியுள்ளார்.

பாம்பு படுக்கையில் படுத்து இரண்டு மனைவியரையும் கால் அமுக்கி விடுவது போல போஸ் கொடுக்க வைத்து போட்டோ சூட் நடத்தியுள்ளார் அந்த நபர்.

நடக்க முடியாதவர்களை நடக்க வைப்பதாகவும் பேச முடியாதவர்களை பேச வைப்பதாகவும் கூறி நாடகமாடி பணம் பறித்துள்ளார் சந்தோஷ் குமார்.

இவரிடம் ஏமாந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்