
மட்டக்களப்பில் இடம்பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வுகள்!
-மட்டக்களப்பு நிருபர்-
சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு யோகாப் பயிற்சி விழிப்பூட்டல் நிகழ்வொன்று மாவட்ட செயலகத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இவ் யோகா பயிற்சி ஆரம்ப நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
இதன்போது மாவட்ட செயலக அரச உத்தியோகத்தர்கள் யோகாக் கலை தொடர்பான அறிவினைப் பெற்றுக் கொள்வதுடன்இ தமது வாழ்வில் யோகா பயிற்சினை பிரயோகப்படுத்தி பயன் பெற முடியும்.
இந்நிகழ்வில் அரசாங்க அதிபர் உரையாற்றுகையில்:- யோகக் கலையின் சிறப்புக்கள் மற்றும் இதனூடாக மனிதர்கள் பெற்றுக் கொள்ளும் பயன்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினார்.
அத்தோடு அரச உத்தியோகத்தர்களுக்கான யோகாப் பயிற்சியினை மண்முனைப்பற்று பிரதேச செயலக கிராமசேவை நிருவாக உத்தியோகத்தர் கே.ராஜன் வழங்கினார்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலை வைத்திய நிபுனர் வைத்தியர் கிரிசாந்த், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணன் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மாநகர சபை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தலைமையில் மற்றொரு யோகா விழிப்பூட்டல் பயிற்சி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.
இதன்போது வைத்தியர்கள், திணைக்கள தலைவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.






