மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக அமைச்சர் நசீர் அஹமட் நியமனம்

-திருகோணமலை நிருபர்-

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக சுற்றாடல் அமைச்சர் பொறியியலாளர் நசீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடமிருந்து அவர் பெற்றுக் கொண்டார்.

தேசிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு அமைய மாவட்ட மட்டத்தில் அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்தல், செயற்படுத்தல் மற்றும் கண்காணிப்பது மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாகும்.

மேலும்,  தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் மாவட்ட மட்டத்தில் பொதுமக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு அதிகாரம் பெற்றுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்