குடும்ப தகராறில் மனைவியின் காலை வெட்டிய கணவன்!

கிரிந்திவெல பிரதேசத்தில் கணவன் மனைவியை தாக்கி காலை துண்டித்துள்ளார். பாதிக்கப்பட்ட மனைவி கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் காலை ஒட்ட முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிந்திவெல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய பெண்ணொருவரே கணவரால் கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக கணவனால் தாக்கப்பட்டு கால் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையினால் துண்டிக்கப்பட்ட கால் மாற்று சிகிச்சைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் மேலதிக சிகிச்சை பெற்று வருவதாக கம்பஹா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பிரியந்த இலேபெரும தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்