
வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதி
நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கையில் உள்ள சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.
மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ.298.77 ஆகவும் மற்றும் விற்பனை விலை ரூ.316.44 ஆகவும் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் ரூ. 294.94 முதல் ரூ. 295. 70 மற்றும் விற்பனை விலை ரூ.318 ஆகவும் பதிவாகியுள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 297 முதல் ரூ. 298 ஆகவும், விற்பனை விலை ரூ. 314 முதல் ரூ. 315 ஆகவும் பதிவாகியுள்ளது.



