
தேயிலை செடிகளுக்கு இடும் பெறுமதிமிக்க உரம் களவு!
-பதுளை நிருபர்-
ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான சாமிமலை பகுதியில் உள்ள மல்லியப்பூ தோட்டத்தில் உள்ள டீசைட் பிரிவில் களஞ்சிய சாலையில் வைக்கப்பட்டு இருந்த 6500 ரூபாய் பெறுமதியான உரம் மூட்டை ஒன்றை காணவில்லை என அந்த தோட்ட முகாமையாளர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமை பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார பணிப்புரை யின் பேரில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்ட புலன் விசாரணையை தொடர்ந்து அதே தோட்டத்தை சேர்ந்த 36 வயது உடைய சந்தேக நபரை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அவரால் விற்பனை செய்யப்பட்ட 3,500 கிராம் உரம் கைப்பற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து சந்தேக நபரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பட்டதாகவும், பதில் நீதவான் சந்தேக நபரை எதிர் வரும் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்ததுள்ளார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
