முகம் சிதறி பலியான ஆண்

மன்னார் நானாட்டான் அச்சங்குளம் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையே இவ்வாறு உயிரழந்துள்ளார்.

இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கை கலப்பாக மாறிய நிலையில் ஒரு குழுவை சேர்ந்தவர்கள் மற்றைய குழு நபர் மீது கூரிய ஆயுதத்தினால் தலையில் தாக்கியுள்ளனர். இதன் போது முகத்தில் படுகாயமடைந்த குறித்த இளம் குடும்பஸ்தர் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.