மலையகம் 200 தாயகம் சஞ்சிகை வெளியீடு

தேசிய கலை இலக்கியப் பேரவையின் அட்டன் கிளையின் ஏற்பாட்டில் 1823 ஆம் ஆண்டு இறப்பர் பெருந்தோட்ட செய்கைக்காக பெருந்தொகையிலான மக்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வந்து குடியமர்த்தப்பட்டதை நினைவு கூறும் முகமாக அனுஷ்டிக்கப்படும்  “மலையகம் 200” என்பதனை கருப்பொருள்களாக கொண்டு தாயகம் 108 வது “மலையகம் 200 தாயகம்” சஞ்சிகை வெளியிடும் நிகழ்வு  நேற்று சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு அட்டன் நகர சபை மண்டபத்தில் ஆரம்பமானது.

இதன் போது சிவ.ராஜேந்திரன் (தேசிய கலை இலக்கியப் பேரவையின் பொது செயலாளர் முன்னாள் மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் அதிபர்(ஒய்வுநிலை) தலைமையில் கலை கலாச்சாரம் பண்பாட்டு நிகழ்வுகளும், கவியரங்கமும் இடம்பெற்றதோடு, சிறப்பு பிரதியும் வழங்கி வைக்கப்பட்து.

இந்த நிகழ்வின் போது பிரதான உரையினை சு.முரளிதரன் (கல்வி அமைச்சு), கருத்துரைகளாக செம்மலர் மோகன் (ஆசிரியர்) செ.கிங்லி கோமஸ் (மத்திய மாகாண தணிக்கை யுரனவை அதிகாரி) ஆகியோர்  நிகழ்த்தினார்கள்.

மலையகம் 200 தாயகம் சஞ்சிகை வெளியீடு

மலையகம் 200 தாயகம் சஞ்சிகை வெளியீடு

மலையகம் 200 தாயகம் சஞ்சிகை வெளியீடு

மலையகம் 200 தாயகம் சஞ்சிகை வெளியீடு