
மினுவாங்கொடையில் துப்பாக்கி பிரயோகம் இருவர் படுகாயம்
மினுவாங்கொடை பஸ்தியன் மாவத்தைக்கு அருகில் நேற்று சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது காரில் பயணித்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை அடுத்து சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், காயமடைந்தவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹீனட்டியானா பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 43 வயதுடையவர்களே படுகாயமடைந்துள்ளனர் என, அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ரி-56 ரக துப்பாக்கியினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
