
மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மேற்கத்திய பான்ட் வாத்தியப் போட்டி
மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மேற்கத்திய பான்ட் வாத்தியப் போட்டி திருமதி .எஸ் சுஜாத்தா குலேந்திரகுமார் (வலய கல்வி பணிப்பாளர் மட்டக்களப்பு) தலைமையில் நேற்று சனிக்கிழமை வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.
மேற்கத்திய பான்ட் வாத்தியப் போட்டியானது நேற்று பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமானது. இந்த போட்டியானது சிரேஷ்ட மாணவர்களுக்கிடையிலான போட்டி மற்றும் கனிஷ்ட மாணவர்களுக்கிடையிலான போட்டி என இரண்டு பிரிவுகளாக நடை பெற்றது.
இதன்போது பிரதம அதிதியாக ஏ. கனக சூரியம் (கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்) , திருமதி. கே. பத்மராஜா (அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட செயலாளர் மட்டக்களப்பு மாவட்டம்), கௌரவ விருந்தினராக படைப்பகுதித் தலைவர் டெழுப்ப பண்டார , திரு. உஜித் என்பி லியனகே(டிஐஜுபி மட்டக்களப்பு) , சிறப்பு அதிதியாக திரு. டி. ஆனந்த ருபன்(கல்குடா வலய கல்வி பணிப்பாளர்) ,திரு. எஸ். எம். எம். அமீர் ( மட்டக்களப்பு மத்திய வலயக் கல்விப் பணிப்பாளர்), திரு வை. ஜெயச்சந்திரன்(பிரதிக் கல்விப் பணிப்பாளர் மட்டக்களப்பு மேற்கு)
, எல்டி. நிலாந்தன் (கட்டளை அதிகாரி 38 வது படைப்பிரிவு தேசிய கேடட் கார்ப்ஸ் மட்டக்களப்பு), திரு. எஸ். சிறிதரன்(பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளர் ) என்போர் கலந்துகொண்டிருந்தனர்.















