
காதல் விவகாரம் : இளம் குடும்பஸ்தர் படுகொலை!
மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கை கலப்பாக மாறிய நிலையில் ஒரு குழுவை சேர்ந்தவர்கள் மற்றைய குழு நபர் மீது கூரிய ஆயுதத்தினால் தலையில் தாக்கியுள்ளனர்.
இதன் போது படு காயமடைந்த குறித்த இளம் குடும்பஸ்தர் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மரணித்தவர் அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தை என தெரிய வருகிறது.
உயிரிழந்தவரின் சடலம் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த குடும்பஸ்தரின் கொலைக்கான காரணம் வெளியாகி உள்ளது.
தாக்குதல் சம்பவத்தின் போது உயிரிழந்த 25 வயதுடைய இளம் குடும்பஸ்தருடைய 23 வயதுடைய சகோதரர் ஒருவர் அச்சங்குளம் கிராமத்தில் யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது நேற்று சனிக்கிழமை காலை குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற 23 வயதுடைய குறித்த இளைளுனை யுவதியின் உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதன் போது காயமடைந்த குறித்த இளைஞர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது சகோதரர் தாக்கப்பட்ட விடயம் குறித்து அறிந்த கொண்ட 25 வயதுடைய இளம் குடும்பஸ்தரான குறித்த இளைஞன் குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இதன் போது குறித்த யுவதியின் உறவினர்களுக்கும்இதாக்குதலுக்குள்ளான இளைஞனின் சகோதரனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கை கலப்பாக மாறியது.
இதன் போது குறித்த இளம் குடும்பஸ்தர் மீது கூரிய ஆயுதத்தினால் தலையில் தாக்கியுள்ளனர்.
இதன் போது படு காயமடைந்த குறித்த இளம் குடும்பஸ்தர் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




