
கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை
களுத்துறை, பலாதொட்ட கொடபராகாஹேன பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொடபராகாஹேன பகுதியில் வசிக்கும் திருமணமாகாத சுஜித் தர்மசேன (வயது – 43) என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் தனது வீட்டுக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட தகராறு காரணமாக இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
