துப்பாக்கிச்சூடு: பெண் பலி
மெதிரிகிரிய பகுதியில் மறைந்திருந்த நபர் ஒருவர் பெண்ணை நோக்கி நடாத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த நிலையில் மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அவர் உயிரிழந்துள்ளார்.
மிரிசேன மீனவ கிராமத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மெதிரிகிரிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்