
கடமைத்தவறிய அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றபோது கட்டானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு அதிகாரி ஒருவர் தமக்கு வழங்கப்பட்ட கடமைகளை ஆற்றத் தவறியமைக்காக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில் அவருக்கு எதிராக 12 ஒழுக்காற்று மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளநிலையில், அனைத்து குற்றச்சாட்டுக்களையும் ஒப்புக்கொண்டதால், அந்த அதிகாரியை பொலிஸ்துறைமா அதிபர் பணி இடைநீக்கம் செய்துள்ளார்.
அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் முதல் அமுலாகும் வகையில் அவரை சேவையில் இருந்து இடைநீக்கம் செய்து பொலிஸ் தலைமையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
