சிறப்பாக காதலை வெளிப்படுத்தும் ராசியினர் இவர்கள் தான்!
நவகிரகங்களில் சுக்கிரன் களத்திர காரகன் என அழைக்கப்படுகிறார். இவர் அமைப்பைப் பொறுத்து ஒவ்வொரு நபரின் காதல், திருமண வாழ்க்கையும் அமையும்.
ஒருவரின் காதல், திருமண சுகத்தைத் தரக்கூடிய சுக்கிரன் அமைப்பைப் பொருத்து அந்த நபர் எப்படி காதலிப்பார் என அறிந்து கொள்ளலாம்.
அதன்படி 12 ராசியினர் தங்களின் வாழ்வில் காதலில் விழுந்தால் அவர்கள் தன் காதலை எப்படி வெளிப்படுத்துவார்கள் என்பதைப் பார்ப்போம்.
செவ்வாய் ஆளக்கூடிய மேஷ ராசியினருக்கு ஆற்றல், வீரம் ஆகியவை செவ்வாய் பகவான் கொடுக்கிறார். இவர்கள் தங்கள் காதலை சொல்லக்கூடிய அளவு தைரியத்தை சிறப்பாக பெற்றிருந்தாலும், தான் விரும்பக்கூடிய நபரின் முழு கவனத்தை ஈர்க்கவும், அவருடன் உண்மையான, ஆழமான பிணைப்பை வளர்த்துக் கொள்வதற்காக நேரம் எடுத்துக் கொள்வார்கள். அதனாலேயே தன் காதலை சொல்ல நேரம் எடுத்துக் கொள்வார்கள்.
களத்திரகாரகன் சுக்கிரனை அதிபதியாக கொண்டது ரிஷபம். காதல், அழகு, செக்ஸ் அனைத்தையும் அதிகமாக விரும்பக்கூடியவர்கள் இவர்கள். தான் விரும்பக்கூடிய நபரிடம் தன்னிடம் இருக்கும் அழகான விஷயத்தை காட்டி காதலிக்க நினைப்பார்கள். அதோடு இவர்கள் பிடிவாத குணத்திற்கு பெயர் பெற்றவர்கள் என்பதால் இவர்கள் தான் விரும்பக்கூடிய நபரை காதலிக்க எதையும் செய்வார்கள்.
இவர்கள் காதல் தொடர்பாக உற்சாகமாக உணரக்கூடியவர்கள். இவர்கள் காதலை தன் குரலில் சொல்ல வேண்டும் என நினைப்பார்கள். மேலும் தான் விரும்பக்கூடிய நபர்கள் தன்னுடன் மட்டும் பேச, ஊர் சுற்ற நினைப்பார்கள். மற்றவர்களிடம் பேச கூட அனுமதிக்கமாட்டார்கள்.
மிதுன ராசியினர் செய்ய வேண்டியது, தான் விரும்பக்கூடிய நபருக்கும் தனிப்பட்ட சுதந்திரம் உண்டு என்பதை உணர்ந்து அவர்களை சற்று சுதந்திரமாக இருக்க விடுங்கள்.
கடக ராசியினர் பொதுவாக அனைவரிடம் அன்பாக, மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்பக்கூடியவர்கள். அப்படி இருக்க தனக்கு பிடித்த நபர், காதல் என்றால் சும்மாவா விடுவார்கள், தன்னால் என்னென்ன செய்ய முடியுமோ அனைத்து விஷயங்களையும் செய்து காதலை வெளிப்படுத்துவார்கள்.
சிம்ம ராசியினர் சற்று தாராள மனப்பான்மை மற்றும் இரக்கப்பண்பு கொண்டவர்கள். இருப்பினும் தன்னுடைய ஆளுமையால் தான் விரும்பும் நபர் தனக்கு பிடித்தமாக நடந்து கொள்ள வைக்க முயல்வார். தான் விரும்பும் அல்லது காதலிப்பவரை மேலே உயர்த்தி சாகசங்களை செய்ய விரும்புவார்.
கன்னி ராசியின் மிகவும் பகுப்பாய்வு செய்து செயல்படக்கூடிய ராசிகள். எனவே அவர்களின் காதல் மிகவும் சுவாரஸ்யமானது. அவர்கள் காதலிக்கிறேன் என பூக்களை கொடுப்பதை விடஇ அவர்களுக்கு விருப்பமான விஷயங்கள் அல்லது சேவைகளை செய்வதில் விருப்பம் அதிகமாக இருக்கும். தான் எதிர்பார்த்தது போல தன் துணை அமையாத போது அல்லது வாழாத போது பெரும்பாலும் ஏமாற்றமடைவார்கள்.
துலாம் ராசிக்காரர்களும் சுக்கிரனால் ஆளப்படுகிறார்கள். இவர்கள் ரிஷப ராசியினரைப் போலவே காதல், படைப்பாற்றல் மற்றும் கவர்ந்திழுக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். துலாம் ராசிக்காரர்கள் தனக்கு விருப்பாமான நபர்களை ஈர்க்க பரிசு பொருட்களையும் கொடுக்க நினைப்பார்கள். மேலும் தன் காதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல மற்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள்.
விருச்சிக ராசியினர் எப்போதும் ரகசியமாக தன் செயல்களை செய்யக்கூடியவர்கள். அதே சமயம் தான் காதலிப்பதை அவர்களிடம் நேரடியாகச் சொல்வார்கள். இருப்பினும் இவர்களின் காதல் முதலில் மோதலில் தொடங்கும். பின்னர் அவரைப் பிடித்து, அது காதலாக மாற வாய்ப்புள்ளது. இவர்கள் தங்கள் நடவடிக்கைகளை எப்போதும் ரகசியமாக வைத்திருப்பதால் இதையும் வெளிப்படுத்த சற்று தாமதமாகலாம்.
தனுசு ராசியினர் சாகசங்களிலும், பயணிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இவர்களுக்கு ஏற்ப தயாராக இருப்பவர்களிடமும், தான் மகிழ்ச்சியாக உணரக்கூடியவர்களிடம் தன் காதலை வெளிப்படுத்த நினைப்பார்கள். இவர்கள் தத்துவ ஞானிகளைப் போல பல நேரங்களில் செயல்படுவார்கள். இவர்களுக்கு எப்போதும் உடன் இருக்கக்கூடிய நபரை உடனே காதலை சொல்லி விட வாய்ப்புள்ளது.
சனியால் ஆளப்படக்கூடிய ராசி மகரம். கடமையில் சிறப்பாக ஈடுபடுவார்கள். காதலை மிகவும் விரும்பக்கூடிய நபராக இருப்பார்கள். இவர்கள் தான் விரும்பும் நபர் தன்னை விரும்புகிறாரா என்பதை அறிந்து கொள்ள அதிகம் முயல்வார்கள்.
கும்ப ராசியினர் விசித்திரமானவர்கள். இவர்கள் புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமானவர்கள். குறிப்பாக காதல் உறவுகளில். அவர்களைப் பொறுத்தவரை, ஒரு சிறந்த நட்பு போல தன் காதலை நினைப்பார்கள். தங்கள் தனித்துவத்தையோ ஒழுக்கத்தையோ கைவிடுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
மீன ராசிக்காரர்கள் கருணை மற்றும் அன்பு அதிகம் செலுத்தக்கூடியவர்கள். அவர்களுக்கு அற்புதமான, பாசமுள்ள ஒரு நபர் கிடைத்துவிட்டால் அவர்கள் வானுக்கும், மண்ணுக்கும் தாவுவார்கள். கால்கள் தரையில் படாது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்