
பரீட்சையில் வெட்டுப் புள்ளியை தாண்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
-கிண்ணியா நிருபர்-
கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட றஹ்மானியா சின்னக் கிண்ணியா வட்டாரத்திலும் வட்டார பாடசாலைகளிலும் 2022ம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளியை தாண்டிய மாணவர்கள் தி/கிண்/அப்துல் மஜீத் வித்தியாலயத்தில் வைத்து அதிபர் முகம்மட் தலைமையில் இன்று வியாழக்கிழமை கௌரவிக்கப் பட்டனர்.
இந் நிகழ்வில் சூறா சபையின் தலைவர் பரீட் , கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஜவாஹிர், அல் அக்ஸா ஆரம்பப் பாடசாலை அதிபர் றஹ்மதுள்ளா, உதவிக் கவ்விப் பணிப்பாளர் றியாத், அப்துல் மஜீத் வித்தியாலய அதிபர் முகம்மட், முன்னாள் நகர சபை உறுப்பினர் மஹ்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


