சாரணர் துருப்புக்களுக்கான கூடாரங்கள் வழங்கி வைப்பு!

-யாழ் நிருபர்-

யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சாரணர் துருப்புக்களுக்கான கூடாரங்கள் இன்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலையின் பழைய மாணவனான அருணாசலம் ஆதித்தன் முன்வந்து இந்த நன்கொடையை வழங்கியிருந்தார்.

அந்தவகையில் பழைய மாணவர் சங்கத்தினூடாக, குறித்த கூடாரங்கள் இன்று உத்தியோக பூர்வமாக பிரதி அதிபர், சாரணர் பொறுப்பாசிரியர் மற்றும் சாரணர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்