
பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!
பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
கடந்த 12ஆம் திகதி பகல் வீட்டுக்குள் நுழைந்த குறித்த சந்தேக நபர்கள் இருவரும் வீட்டிலிருந்த பணிப்பெண்ணை அச்சுறுத்தி 10,707,800 ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பணம், தங்கப் பொருட்கள் அடங்கிய சிறிய பெட்டகத்தை திருடியுள்ளனர்.
இந்நிலையில் சிசிரிவி கெமராக்கள் மூலம் குறித்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் தொடர்பிலான மேலதிக தகவல் எதுவும் அறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பொரலஸ்கமுவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி 071-8591646 மற்றும் பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தின் 011-2150769 என்ற இலக்கங்களில் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
