ஆசிரியை குத்திப் படுகொலை!

மாத்தறை, ஊருபொக்க பகுதியில் நேற்று புதன் கிழமை பிற்பகல் பாடசாலை கற்றல் நடவடிக்கை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது காதலன் இந்த கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் குறித்த காதலனை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.