
3 வயது சிறுவனுக்கு எமனான இரும்பு கதவு!
முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் நேற்று புதன் கிழமை காலை வீட்டின் இரும்பு கதவு வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
கேப்பாபிலவு பகுதியை சேர்ந்த ஆதவன் லிதுசிகன் (வயது – 3) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த வேளை கேற் (இரும்பு கதவு) சிறுவன் மீது வீழ்ந்து சிறுவன் உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்த சிறுவனின் உடல் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
