கிழக்கு சுகாதார அமைச்சின் இலவச நடமாடும் சேவை தொடர்பான அறிவித்தல்!

-கிண்ணியா நிருபர்-

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அனுசரனையுடன் தம்பலகாமம் பிரதேச செயலகமும் முள்ளிப்பொத்தானை ஆரம்ப சுகாதார வைத்திய அதிகாரி பிரிவும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது 2023.06.17 ந்திகதி அன்று சனிக் கிழமை காலை 6.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை முள்ளிப்பொத்தானை திஸ்ஸபுர ஹமீதியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இடம் பெறவுள்ளதாக தம்பலகாமம் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ப.சுதன் தெரிவித்தார்.

இதில் இரத்தப் பரிசோதனை, கண் பரிசோதனை, பற் சிகிச்சை, வெளிநோயாளர் பிரிவு பொது வைத்திய சேவை, ஆற்றுப்படுத்தல், சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவி பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ் வழங்கல், பொது சன மாதாந்த உதவி கொடுப்பனவு, நோய் உதவி கொடுப்பனவு (புற்று நோய், சிறு நீரக நோய்) ,  மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணம் வழங்கல், முதியோர் , தேசிய அடையாள அட்டை இறப்பு பிறப்பு சான்ளிதழ் தொடர்பான பல சேவைகள் அன்றைய தினம் இடம் பெறவுள்ளதுடன், பொது மக்கள் கலந்து கொண்டு இலவச சேவையினை பெறுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்..