யாசகருக்கு உதவிய பின் யாசகம் செய்த பெண்!
மலையக பகுதியில் பேருந்து ஒன்றில் யாசகம் செய்தவருக்கு, தன்னிடமிருந்த பணத்தை கொடுத்துவிட்டு, பயணச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக, ஏனைய பயணிகளிடம் பெண்ணொருவர் யாசகம் செய்துள்ளார்.
நடுத்தர வயதுடைய குறித்த பெண், தன்னுடைய மகளின் வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். வேறு சிந்தனையில் இருந்த அவர் தான் வைத்திருந்த 50 ரூபாய் பணத்தை, நடத்துனர் என நினைத்து யாசகரிடம் கொடுத்துவிட்டார்.
மகளிடம் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றே அப்பெண், தன்னுடைய பணப்பையில் 50 ரூபாயை மட்டுமே வைத்திருந்துள்ளார். யாசகர் இறங்கியவுடன் பேருந்தில் ஏறிய நடத்துனர், பயணத்துக்கான பணத்தை கேட்டபோது தான், இருந்த பணத்தை ஏற்கெனவே கொடுத்தமை ஞாபகத்துக்கு வந்தது. அதுதொடர்பில் நடத்துனருடன் அப்பெண் முரண்பட்டுள்ளார்.
எனினும், அப்பெண்ணுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த பயணியே, நிலைமையை தெளிவுப்படுத்தியுள்ளார்.
புரிந்துகொண்ட அப்பெண், ஏனைய பயணிகளிடம் உதவிக்கேட்டு பயணச்சீட்டுக்கான கட்டணத்தை செலுத்தி பயணித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்