
புதிய உலக சாதனை படைத்த இலங்கை இராணுவம்
இலங்கை உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
2023 ஜூன் முதலாம் திகதியன்று கொழும்பு இராணுவ மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவர், லெப்டினன்ட் கேணல் கே. சுதர்ஷன் தலைமையில் இந்த சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 13.372 செ.மீ நீளமும் 801 கிராம் எடையும் கொண்ட சிறுநீரக்கல் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள கின்னஸ் உலக சாதனைகளின்படி, உலகில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய சிறுநீரகக் கல் 13 சென்றிமீற்றர், 2004 இல் இந்தியாவிலும் அதிக நிறையான 620 கிராம் சிறுநீரகக்கல் 2008 இல் பாகிஸ்தானிலும் கண்டறியப்பட்டன.


