
துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்!
ரம்புக்கனை ஹிரிவடுன்ன சோதனைச் சாவடி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஹிரிவடுன்ன சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் கட்டளையிட்டதற்கு இணங்கத் தவறியதற்காக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
