மட்டு.களுவாஞ்சிக்குடியில் பாவனைக்குதவாத மீனை உட்கொண்ட மற்றொருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, மாங்காட்டில் நச்சுத்தன்மை கொண்ட மீனை உண்டு ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த  பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

மாங்காடு கட்டுப் பிள்ளையார் வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய தில்லையம்பலம் யூசைமலர் என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மீனவர்களின் வலையில் சிக்கிய நச்சு தன்மை கொண்ட மீனை சமைத்து சாப்பிட்ட ஒரு மணித்தியாலயத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 27 வயதுடைய தில்லையம்பலம் புஜேந்தினி, அவரது 3 வயதுடைய மகன் அஸ்வின், அவரது தாயாரான யூசைமலர், அவரது 20 வயதுடைய சகோதரன் கிறிஸ்ரின் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 27 வயதுடைய தில்லையம்பலம் புஜேந்தினி உயிரிழந்ததுடன் அவரது மகன் மற்றும் சகோதரன் சிகிச்சை பெற்று வெளியேறிய நிலையில் அவரது தாயார் தொடர்ந்தும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6 மணிக்கு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்