காணிக்குள் நுளைந்த பசு: உரிமையாளருக்கு துப்பாக்கிச்சூடு!
மெதகம ஊருமுத்தாவ பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
37 வயதுடைய ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவரின் பசுவொன்று பிரிதொரு நபரின் காணிக்குள் பிரவேசித்தமைக்காகவே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்