துப்பாக்கி சூட்டு சம்பவம் : பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
கடந்த மே மாதம் 20 ஆம் திகதி பொரளை லெஸ்லி ரணகல மாவத்தைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பொரளை லெஸ்லி ரணகல மாவத்தைக்கு அருகில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதில் 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் வசிப்பிடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மே 30 அன்று, தேடப்படும் சந்தேக நபர் ஒருவரைப் பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியிருந்தனர்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் மற்றொரு சந்தேக நபரை கைது செய்ய தற்போது பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 071- 8591733, 071- 8591735, அல்லது 071- 8596503 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்