மாமனுடன் மனைவி உல்லாசம்: தடியால் அடித்துக் கொன்ற கணவன்!
இந்தியாவில் தனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த சொந்த தாய்மாமாவை மருமகன் கட்டையால் அடித்துக் கொன்றுள்ளார்.
ராஜஸ்தானின் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள டவுடா பகுதியில் கஜூரியாவில் வசிக்கும் 45 வயதான சங்கர் என்பவர் பகோரா கிராமத்திலேயே கூலி வேலை செய்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த அவரது மருமகன் பிரகாஷ் குஜராத்தில் கூலி வேலை செய்து வருகிறார். பிரகாஷின் மனைவி கிராமத்தில் உள்ள வீட்டில் தனது 1 வயது மகனுடன் தங்கியுள்ளார்.
தனது தாய்மாமா சங்கருடன் தனது மனைவி தகாத உறவில் இருப்பதாக சந்தேகம் அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் தனது கிராமத்திற்கு வந்துள்ளார். எனினும் தனது வீட்டிற்கு செல்லாமல் இரவு 10 மணியளவில் திடீரென வீட்டுக்குச் சென்றார். அப்போது சங்கரும் தனது மனைவியும் தனிமையில் இருந்ததை நேரில் பார்த்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் வீட்டில் வைத்திருந்த தடியை எடுத்து மாமாவை தாக்கியுள்ளார். இதன்போது தலையில் தாக்கப்பட்டு பலத்த காயம் அடைந்த சங்கர் மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த பிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
சங்கருக்கு சிகிச்சை அளிக்க உறவினர்கள் உதய்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்இ ஆனால் வழியிலேயே அவர் இறந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த டோவ்டா பொலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளதுடன் பிரகாஷை கைது செய்வதற்காக தேடி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்