தெஹிவளையில் ஒருவர் படுகொலை

தெஹிவளை ஓபன் பகுதியில் தனிப்பட்டு தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை இரவு ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலின் போது பலத்த காயமடைந்த குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தெஹிவளை ஓபன் பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.