பராமரிப்பு நிலையத்திலிருந்து மூன்று சிறுமிகள் தப்பியோட்டம்

கொழும்பில் மடத்துகம நகருக்கு அருகில் இயங்கும் பராமரிப்பு நிலையத்தில் இருந்த மூன்று சிறுமிகள் தப்பி ஓடியுள்ளதாக மடத்துகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

15, 16 மற்றும் 17 வயதுடைய கலென்பிடுனுவெவ, நொச்சியாகம மற்றும் தலாவ பிரதேசங்களில் வசிக்கும் மூன்று சிறுமிகளே தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த மூன்று சிறுமிகளும் குறித்த பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்துள்ளனர்.

மேலும் இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.