தமிழக முதல்வர் கிழக்கு மாகாண ஆளுநருக்கு வாழ்த்து

கிழக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்றுள்ள இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு , தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார்.

இந்த தொலைபேசி உரையாடலின் போது ,கலைஞரின் ஆட்சி காலத்தில் இலங்கைக்கு பல உதவி திட்டங்கள் வழங்கப்பட்டமை நினைவு கூறப்பட்டது.

இதை நினைவூட்டும் வகையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை இலங்கையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக, செந்தில் தொண்டமான் தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.