
பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்
அக்மீமன பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேக நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடமாடும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அக்மீமன பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரைச் சோதனையிட முற்பட்ட போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் அதிகாரிகளை சோதனை செய்ய முற்பட்ட போது, அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும் ,மற்றையவர் அதிகாரிகளை தாக்கி வெடிகுண்டை வீச முயன்றதாகவும் தெரியவருகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், தப்பியோடிய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் இருந்து ரி-56 ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
