நாளை ஆரம்பமாகும் பாடசாலைகள்: கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் தவணையின் மூன்றாம் கட்டம் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலை தவணை நாளை ஆரம்பமாவதையிட்டு கல்வி அமைச்சா் சுசில் பிரேமஜயந்த கேட்டுக்கொண்டதற்கமைய இன்று  ஞாயிற்றுக்கிழமை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நாட்டின் அ​னைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் நுளம்பு பெருக்கமுள்ள இடங்களை கண்டறித்து அவற்றை துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபடுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இதற்கமைய கொழும்பில் உள்ள 144 பாடசாலைகளை உள்ளடக்கியவாறு மாதிரி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.