வாகன விபத்து: இருவர் காயம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கட்டைக்காட்டில் பிக் அப் ரக வாகனமொன்று நேற்று சனிக்கிழமை வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி சென்ற பிக் அப் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் வாகனத்தில் பயணித்த இருவரும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.