
மின்கட்டணம் குறைப்பு
எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின்கட்டண திருத்தத்தின் போது மின்கட்டணம் குறைக்கப்படவுள்ள அளவு தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு யோசனைகளை முன்வைத்துள்ளது.
இதற்கமைய 0 – 30 வரையான மின்சார அலகுகளை பயன்படுத்தும் நுகர்வோருக்கான 26.9 சதவீதத்தாலும், 31 – 60 வரையான மின்சார அலகுகளை பயன்படுத்தும் நுகர்வோருக்கு 10.8 சதவீதமும், 61 – 90 வரையான அலகுகளுக்கு 7.2 சதவீதமும் 91 – 180 வரையான அலகுகளுக்கு 3.4 சதவீதம் கட்டணம் குறைக்கப்படும்.
மேலும், 180 அலகுகளுக்கும் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கான கட்டணத்தை 1.3 சதவீதத்தால் குறைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
