
கடலில் மூழ்கி ஒருவரை காணவில்லை
காலி ஹபராதுவ தல்பே கடலில் நீராடச் சென்ற மாணவர்களில் 6 பேர் நேற்று சனிக்கிழமை மாலை அலையில் அடித்து செல்லப்பட்டதுடன் அவர்களில் ஐந்து பேரை பொலிஸார் பிரதேச மக்களுடன் இணைந்து மீட்டுள்ளதுடன் ஒரு மாணவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குருநாகல் பொத்துஹெர பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவனே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளான்.
குருநாகல் பிரதேசத்தில் உள்ள தனியார் வகுப்பு ஒன்றின் ஏற்பாட்டில் சுற்றுலா சென்றிருந்த மாணவர்கள் குழு ஒன்றே தல்பே கடற்கரை பகுதியில் இவ்வாறு மூழ்கியுள்ளனர்.
