வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் ரூ. 283.68 ஆகவும், விற்பனை விகிதம் ரூ.298.94 முதல் ரூ.300.47 ஆகவும் பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 282.84 முதல் ரூ. 284.82 ஆகவும்,  விற்பனை விகிதம் ரூ. 297 முதல் ரூ. 299 ஆகவும் பதிவாகியுள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 285 முதல் ரூ. 287 மற்றும் விற்பனை விகிதம் ரூ. 297 முதல் ரூ. 299ஆகவும் பதிவாகியுள்ளது.