
பொலிஸாரின் கையைக் கடித்த பெண்!
வறக்காப்பொல, தொலபாடுவ பிரதேசத்தில் கசிப்பு விற்பனை செய்பவரின் மனைவி, பொலிஸ் உயர் அதிகாரியின் கையைக் கடித்தள்ளார்.
கசிப்பு காய்ச்சி விற்பனைச் செய்யும் நபரை கைது செய்வதற்காக, கேகாலை ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகரும் சென்ற போதே குறித்த பெண், அதிகாரியின் கையை கடித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.
குறித்த பெண்ணை கேகாலை மற்றும் வறக்காப்பொல பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகநபரான அந்தப் பெண், தன்னுடைய கணவனை பொலிஸாரிடம் இருந்து விடுவித்துக்கொள்ளும் நோக்கிலேயே, பொலிஸ் அதிகாரியின் கையைக் கடித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், பொலிஸார் ஒருதொகை கசிப்பு போத்தலுடன் அதனை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியையும் கைப்பற்றி ஒருவரை கைது செய்துள்ளனர்.
