
கடலில் 12 அடி நீள முதலை
வாதுவ, மொல்லிகொட, தல்பிட்டிய மற்றும் பின்வத்த கடற்கரைகளுக்கு அருகில் 12 அடி நீளமான முதலை ஒன்று நேற்று புதன் கிழமை பிற்பகல் நடமாடுவதை கடற்கரைக்கு அருகில் உள்ளவர்கள் அவதானித்துள்ளனர்.
இதன் காரணமாக கடற்கரையை அண்மித்துள்ள மக்களும், மீனவர்களும் சற்று அச்சமடைந்துள்ளதாகவும், பலர் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து விலகி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், கடற்கரையில் பாதுகாப்பற்ற முறையில் நடமாடுவதை தவிர்க்குமாறும் வாதுவ பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
