
இம்மாத இறுதி வரை மரக்கறி விலை உயர்வு
இம்மாத இறுதி வரை மரக்கறி விலை உயர்வாக இருக்கும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மரக்கறிகளின் விலையேற்றம் காரணமாக, நுகர்வோர் மாற்று வழிகளில் ஈடுபடுவதுடன், கடந்த காலங்களில் சந்தையில் மரவள்ளிக்கிழங்கு மற்றும் பலாக்காய்களுக்கு அதிக கேள்வி எழுந்துள்ளது.
அதன் காரணமாக ஒரு கிலோகிராம் மரவள்ளிக்கிழங்கு மற்றும் பலாக்காயின் விலை இன்று வியாழக்கிழமை 200 ரூபாவாக அதிகரித்துள்ளதுள்ளது.
அண்மைய நாட்களாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பலாக்காய்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
கெரட், போஞ்சி, பீட்ரூட், வெண்டைக்காய், நோகோல், கறிமிளகாய், பாகற்காய் போன்ற காய்கறிகளின் மொத்த விலை 250 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக அதிகரித்திருந்தாலும் சில பகுதிகளில் ஒரு கிலோ காய்கறிகள் 250 ரூபாவுக்கு விற்கப்படுவதாக சந்தை ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
