
கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு!
ஹிக்கடுவை கடற்பகுதியில் நேற்று புதன் கிழமை நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கியதையடுத்து, உயிர்காப்பு படையினரால் அவர் கரைக்கு கொண்டு வரப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
29 வயதான குறித்த ரஷ்ய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஹிக்கடுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
