மட்டு.கல்லடியைச் சேர்ந்த முதியவர் பாதயாத்திரையின் போது திடீர் மரணம்

மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கதிர்காமத்திற்கு பாதயாத்திரை மேற்கொண்டிருந்த போது பானகமை பகுதியில் வைத்து இன்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் உயிரிழந்துள்ளதாக, பாதயாத்திரிரையில் கலந்து கொண்டிருந்த முருக அடியார் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மட்டக்களப்பு கல்லடி அரசாங்க விடுதியைச் சேர்ந்த சி.திருநாவுக்கரசு (வயது-60) என்பவரே பானகமை பிள்ளையார் ஆலயத்தில் அமர்ந்திருந்தவரே உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை , பொலிசார் சடலத்தை பொறுபேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.