
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் ரூ.284.84 முதல் ரூ. 285.56 ஆகவும், விற்பனை விலை ரூ. 297.94 முதல் ரூ. 298.43 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ, சிங்கப்பூர் டொலர் மற்றும் சுவிஸ் ஃபிராங்க் மற்றும் வளைகுடா நாட்டு நாணயங்களுக்கு எதிராகவும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது.

