கஜேந்திரகுமார் மீது தாக்குதல் சம்பவம் : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர்  பொன்னம்பலம் கஜேந்திரகுமாரால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாளை புதன்கிழமை வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.