
வாகன விபத்து: கணவன் மனைவி பலி
ஹபரணையில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணியலவில் வேன் ஒன்று கணரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்மவாச்சதீவை சேர்ந்த கணவன் மனைவி இருவருமே இவ்வாறு பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிண்ணியாவை சேர்ந்த முஸ்தபா அலாப்தீன் என்பவருக்கு சொந்தமான வேனில் விமான நிலையத்தில் இருந்து கிண்ணியா நோக்கி வந்துகொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இதன் போது காயமடைந்த வேனின் சாரதி கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



