இராணுவ பஸ் மோதி வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு

ஹிக்கடுவ பகுதியில் காலி கொழும்பு பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை இராணுவப் பஸ் மோதியதில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் 70 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் அவரின் அடையாளம் இது வரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இராணுவ பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.