வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி,  மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 284.17 முதல் ரூ.283.20 ஆகவும்,  விற்பனை விகிதம் ரூ. 299.45 முதல் ரூ. 298.42

கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 283.83 முதல் ரூ. 282.02 மற்றும் விற்பனை விகிதம் ரூ. 298 முதல் ரூ. 297

சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 285 மற்றும் விற்பனை விகிதம் ரூ. 297  ஆக பதிவாகியுள்ளது.